காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலய மாணவர்களினால் சேமிக்கப்பட்ட பணம் கையளிக்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலய மாணவர்களினால் கடந்த 2022 ம் ஆண்டு சிறுவர் தினத்தினை முன்னிட்டு வழங்கப்பட்ட உண்டியல்களில் சேமிக்கப்பட்ட பணம் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு அம்மாணவர்களின் கைகளினால் நேற்றைய தினம் (25) வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் எஸ்.ஐ. யாசீர் அறபாத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் “சேமிப்போம் உயிரினை காப்பாற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் மாணவர்களால் சேமிக்கப்பட்ட பணம் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக கிழக்கு மாகாண புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரும் பொதுமுகாமையாளருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் யூ. நூகுலெப்பையிடம் சுமார் 250இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களால் தாம் சேகரித்த பணம் கையளிக்கப்பட்டது.

இதன் போது புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு வழங்கும் காணொளிகள் இப்பாடசாலை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் காத்தான்குடி மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் ஹதீப் மௌலவி பாஸில் முப்தி, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம். ஜௌபர், உறுப்பினர்களான எஸ்.எல்.எம். ஆரிப், எம்.எப்.எம். முனீர், எம். நஜிமுல்லா, பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி. றபா ஆதம்லெப்பை உட்பட ஆசிரியர்கள், பராமரிப்பு நிலையத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects