2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்,336 பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க தகமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலப்பகுதி இன்று (03.03.2025) ஆம் திகதியிலிருந்து 2025.03.12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை வின்னப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எவ் விதத்திலும் இத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










