நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – சர்வதேச நாணய நிதியம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாடு முழுவதும் உயிர்களைப் பலிகொண்டு, ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்த அழிவுகரமான புயல் மற்றும் வெள்ள நிலைமையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூலி கோசாக், ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ளார். 

பேரழிவின் பின்னரான மதிப்பீட்டு செயற்பாடுகளுக்கு தமது ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். 

மதிப்பீட்டு நடவடிக்கைகளின் பின்னர் இலங்கையின் பொருளாதார தாக்கங்கள் தொடர்பான தெளிவான தரவுகள் உறுதி செய்யப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, நாட்டை மீள கட்டியெழுப்புவதற்குச் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் திட்டமிட்டபடி டிசம்பர் 15 ஆம் திகதி IMF நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூலி கோசாக், தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects