மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபத் திறப்பு விழாவானது இன்று 03-01-2025 அன்று நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப்பதாதை திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇