சந்தையில் பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கறிமிளகாய் ஒருகிலோ கிராம் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மரக்கறிகளின் விலைகள் தற்போது சந்தையில் அதிகரிப்பைப் பதிவு செய்வதனை காணக்கூடியதாக உள்ளது.
கரட் ஒரு கிலோகிராம் 520 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோகிராம் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 320 ரூபாய்க்கும், கோவா ஒரு கிலோகிராம் 400 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோகிராம் 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நாட்களில் பெய்த மழையுடனான காலநிலையினால் இவ்வாறு மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










