இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 700 பேருந்துகளை ஏலத்தில் விட தீர்மானம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த முடியாத 700 பேருந்துகளை இந்த வருடம் ஏலத்தில் விட இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

இந்த பேருந்துகள் அனைத்தும் பல வருடங்களாக இயங்க முடியாத நிலையில் இருப்பதாக அந்த சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

கொழும்பு பிரதேசத்தில் இயங்க முடியாத நிலையில் 103 பேருந்துகள் உள்ளதாகவும், அந்த பேருந்துகளின் பதிவை இரத்து செய்யுமாறு அறிக்கையொன்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து சாலைகளில் இருக்கும் பேருந்துகளை இரும்புக்காக ஏலம் விடவுள்ள நிலையில் அதில் கிடைக்கும் பணத்தில் புதிய பேருந்துகளை கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை போக்குவரத்து சபையின் 5,300 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் பேருந்துகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects