மனித இனம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி அளவில் பெருமித்தத்தைக் கொண்டிருக்கின்றது.
2032 ஆம் ஆண்டளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மொழியில் தேர்ச்சி பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற தொனிப்பொருளின் கீழ் இன்றைய நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்த பெருமிதத்தின் ஒரு வெளிப்பாடாகத்தான் மொழி தாய்மொழி அமைந்துள்ளது. அப்படிபட்ட மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த சில இளைஞர்களை நினைவுகூரும் நாளே தாய்மொழி தினமாக மாறியது.
மொழி மனித இனத்தின் நாகரீக பரிணாமத்தின் ஆரம்பப் படிநிலைகளில் ஒன்றான மொழி தகவல் தொடர்பிற்கு பயன்படுத்தப்படும் கருவியாக மாத்திரமின்றி ஒரு சமூகத்தின் பண்பாட்டுடனும் , கலாசாரத்துடனும் ஒன்றிணைந்து சமூகத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனமாகவே மொழி திகழ்கின்றது.
சர்வதேச தாய்மொழி தினம் எவ்வாறு உருவானது?
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் வங்காளதேசத்தில் உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது.
மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியை , வங்காள தேசத்தில் திணிக்கப்படுவதை, மக்கள் ஏற்கவில்லை.
இதனையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி ‘வங்க மொழி இயக்கம்’ உருவானது.
இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் நடவடிக்கைகளினால் 04 மாணவர்கள் உயிரிழந்தனர்.
போராட்டம் தீவிரமாக பரவியதை தொடர்ந்து, 1956ஆம் ஆண்டு, வங்களாதேசத்தின் தாய்மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டாக்காவில் இடம்பெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக வருடந்தோறும் , பெப்ரவரி 21ம் திகதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார்.
தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பெப்ரவரி 21 ஆம் திகதியை 1999 ஆம் ஆண்டு சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21 ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினம் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇