மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர சிகிச்சை….

தற்காலத்தில் எம்முடைய இளம் பெண்களும், பெண்மணிகளும் பல தருணங்களில் சிரிக்கும் போதோ இருமும் போதோ தும்மும் போதோ அல்லது உடற்பயிற்சியின் போதோ அவர்களையும் அறியாமல் சிறுநீர் கசிவு உண்டாகும். இத்தகைய பாதிப்பு இருந்தால் இதனை உடனடியாக அவதானித்து, அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

மன அழுத்தம் , இருமல், தும்மல், சிரிப்பு, உடற்பயிற்சி, எடை கூடிய பொருட்களை தூக்குவது போன்ற பல காரணங்களால் எம்மில் சிலருக்கு அவர்களுடைய சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்பட்டு, அதன் காரணமாக சிறுநீர் கசிவு ஏற்படக்கூடும்.

பொதுவாக இத்தகைய பாதிப்பிற்கு வாழ்க்கை நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் நிவாரணம் கிடைக்கக்கூடும். சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்க சிறிய அளவிலான சத்திர சிகிச்சை அவசியமாகிறது.

இத்தகைய தருணங்களில் Sling Surgery எனப்படும் பிரத்யேக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இத்தகைய பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும் இத்தகைய சத்திர சிகிச்சையின் போது சிஸ்டோகோபி மற்றும் TOT Sling ஆகியவை பாவிக்கப்படுவதால் நோயாளிக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கிறது.

சத்திர சிகிச்சைக்குப் பிறகு வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தை உறுதியாக பின்பற்றினால் இத்தகைய பாதிப்பிலிருந்து விரைவில் முழுமையான நிவாரணத்தை பெறலாம்.

வைத்தியர் விகாஸ்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects