வீதியின் பயணிக்கும் வாகனங்களுக்கான வேக வரம்பு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
வீதிகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் ரூபாவை இலங்கை பொலிஸாருக்கு வழங்குவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
”2023 ஆம் ஆண்டு 2,214 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துக்களில் 2,321 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடமும் கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை 1,103 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அந்த வீதி விபத்துகளினால் 1,154 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இந் நிலைமையைக் குறைக்க எங்கள் அமைச்சு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.” என தெரிவித்தார்.
(மேலும் அறிய இணைப்பை அழுத்தவும்…👇👇)