இலங்கையின் கல்வித்துறையை டிஜிட்டல் மயப்படுத்த பல மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் சீனா!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் கல்வித்துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக, 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னணியில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி, தெரிவு செய்யப்பட்ட 500 பாடசாலைகளுக்கு, ஸ்மார்ட் வகுப்பறைக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்குவதற்கும், வலையமைப்பு செயல்பாட்டு முகாமைத்துவ பிரிவை நிறுவுதல் மற்றும் அதனோடு தொடர்புடைய விடயங்களை முன்னெடுப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. 

இதற்கமைய இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தமொன்று நேற்று கல்வி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects