ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, பாதுகாப்பு அமைச்சின் நிகழ்ச்சி நிரலின்படி 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் அணிவகுப்பு நடைபவனி 22-12-2023 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் அத்தியட்சகர் – பிரிகேடியர் G.S பொன்சேகாவின் வழிகாட்டலில், 38ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிக் கல்விப் பணிப்பாளர் உட்பட பல்வேறு அதிதிகளும், பாடசாலை அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இவ் அணிவகுப்பு நடைபவனியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி, வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை, மைலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணி மாணவர்கள் பங்குபற்றியிருந்ததுடன், பாண்ட் வாத்திய கண்காட்சியும், அணிநடையும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் உரையாற்றிய 38ஆவது படைப்பிரிவு கட்டளையிடும் அதிகாரி, மட்டக்களப்பில் இவ்வாறானதொரு தேசிய மாணவர் படையணி இருப்பதனை வெளிக்காட்ட இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் எனத் தெரிவித்தார்.
அரசாங்க அதிபர் உரையாற்றுகையில், இன்றைய நிகழ்வில் மிகவும் நேர்த்தியாகவும், ஒழுக்கத்துடனும் மாணவப் படையணியினர் நடந்து கொண்டமையானது எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவப் பண்புகளுடன் அவர்கள் வளர்வதை உறுதிப்படுத்துகின்றது எனத் தெரிவித்தார்.
இந்நடைபவனியானது மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பித்து கல்லடிப் பாலத்தின் அருகில் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…..
3 Responses
செய்திகளை சிறப்பான முறையில் தொகுத்துத் தாறதில மதகு எப்பவும் மதல் இடத்தில தான்.
நாடு இருக்கிற நிலமைக்கு மாணவர் படை ரொம்ப முக்கியம்.
Super. Athank you mathaku team