தொடருந்து சட்டத்தை மீறியமை தொடர்பான வழக்குகள் மற்றும் அபராதங்களினூடாக இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 3 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தொடருந்து பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.
அதில் அதிகமான தொகை பயணச்சீட்டின்றி பயணித்தவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தினூடாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயணச் சீட்டின்றி பயணித்த 658 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விதிக்கப்பட்ட அபராதங்களினூடாக மாத்திரம் 20 இலட்சத்து 25 ஆயிரத்து 826 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தொடருந்து பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இக் காலப்பகுதியில் குறைந்த வகுப்புகளுக்கான பயணச் சீட்டைப் பெற்று முன்னிலை வகுப்புகளில் பயணித்த 299 பேருக்கு எதிராகச் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனூடாக மாத்திரம் 9 இலட்சத்து 33 ஆயிரத்து 702 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தொடருந்து பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇