நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நாளை 22.12.2023 முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையும் கண்டியிலிருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் வரை செல்லும் பயணிகளின் வசதி கருதியும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇