மே மாதத்தில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம் மே மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 31.05.2024 அன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.5 சதவீதமாகக் காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம் மே மாதத்தில் 0.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் ஏப்ரல் மாதத்தில் 3.3 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 0.0 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

அதேநேரம், கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப் பணவீக்கம் மே மாதத்தில் 1.3 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects