எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தற்போது புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் நடப்பதுதான் பணியாளர்களின் வேலையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு நாள் ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் 99,885 ரூபாய் (இந்திய மதிப்பில் 28,000 ரூபாய்) வேதனத்தை டெஸ்லா நிறுவனம் வழங்குகிறது.
இதற்கு 5’7 முதல் 5’11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் தயாரிப்பதைத் தவிர்த்து அதிநவீன அறிவியல் சாதனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஈடுபட்டு வருகிறது.
அந்தவகையில் மனிதனைப் போன்ற ரொபோக்களை டெஸ்லா நிறுவனம் தயாரித்து அதை மனிதர்கள் செய்யும் விடயங்களைச் செய்யப் பழக்கி வருகிறது.
அப்படி உருவாக்கப்படும் ரொபோவுக்கு மனிதர்களின் செயல்பாடுகள் பற்றிப் பழக்கப்படுத்துவதே குறித்த பணியாளர்களுக்கான பணி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇