பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமனம்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டார்.
குறித்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அன்று 09.03.2026 ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குணதாச சமரசிங்க, இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










