2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார்.
அதன் படி, இது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.
இதே வேளை, அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.15 சதவீதமாகும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










