காத்தான்குடி மீரபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் மாணவர் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய மாணவத் தலைவிகள் 52 பேர் நியமிக்கப்பட்டனர்.
மாணவத் தலைவிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் 10 விடையப்பரப்பில் மாணவர்களின் தகமைகள் பரிசீலிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டு மாணவத் தலைவிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கான நியமனக் கடிதம் இன்று (15.07.2024) நடைபெற்ற பாடசாலை காலைக் கூட்டத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இம்மானவிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்பு மத்திய கல்வி பாளையத்தின் அனுசரனையுடன் நடத்தப்படயிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிகளுக்கான நியமனக் கடிதத்தை பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் யு. எல்.மன்சூர் பாடசாலையின் பிரதி அதிபர்களான யு. எல். எம் .என். முபீன் ,கே எல் எம் இல்யாஸ் மற்றும் திருமதி பிரதீபன் ஆகியோர்கள் வழங்கி வைத்தனர்.
மாணவத் தலைவிகளை தெரிவு செய்வதற்கான ஒழுங்குகள் மற்றும் நேர்முகப் பரீட்சை ஏற்பாடுகளை பிரதி அதிபர் முபீன் மேற்கொண்டு இருந்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇