அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சிலர் இன்று பிற்பகல் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்ஹ,
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே,
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க,
வலுசக்தி அமைச்சர் புண்னிய ஸ்ரீ குமார ஜயகொடி,
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கே.டி.லால் காந்த,
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி,
சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெதி,
கிராமிய அபிவிருத்தி, சமுகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…