பனிமூட்டம் காரணமாக திருப்பிவிடப்பட்ட கட்டுநாயக்கா வந்த 3 விமானங்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

இன்று (19.11.2025) காலை நிலவிய மிகுந்த பனிமூட்டம் காரணமாகவே இந்த விமானங்கள் இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL- 881 விமானம் மற்றும் சவூதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 விமானம் ஆகியன மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

அத்துடன் சவூதி அரேபியாவின் தம்மாமிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-254 விமானம் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

விமானம் தரையிறங்குவதற்கு பாதிப்பாக இருந்த பனிமூட்டமான நிலைமை நீங்கி தற்போது சீரான வானிலை தென்படுவதாக கூறப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects