அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் நேற்று (07.11.2023) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, அஸ்வெசும வேலைத்திட்டத்தை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான அதிகாரிகளை நியமிப்பதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்து அதனை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான இயலுமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇