இலங்கைக்கான புதிய வரியை விதித்த அமெரிக்க ஜனாதிபதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரியை நிர்ணயித்து அமெரிக்கா வரிக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

விதிக்கப்பட்ட குறித்த வரியானது ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரம்பத்தில், இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்திருந்த வரி 44% ஆகும். 

வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மேலும் ஏழு நாடுகளுக்கு புதிய கடிதங்களை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 09.07.2025 அன்று அறிவித்தார். 

அதன் பிரகாரம், அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளுக்கும் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், புருனே மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் 25% வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் 20% வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects