ஏப்ரலில் சுற்றுலாத்துறை வருமானத்தில் வீழ்ச்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 157.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இருப்பினும், 2025 ஏப்ரல் மாதத்தின் சுற்றுலா வருமானமான 256.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இது 38.8% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களின்படி,

2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 135,643 ஆகும். 

அதேநேரம், 2025 ஏப்ரல் மாதத்தில் 174,608 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையின் ஊடாக 256.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக ஈட்டப்பட்டிருந்தது. 

இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 876,277 ஆக பதிவாகியுள்ளதுடன், இக்காலப்பகுதியில் ஈட்டப்பட்ட மொத்த சுற்றுலா வருவாய் 1,111 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

இது, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 896,884 சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் 1,379 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.3% உம், சுற்றுலா வருவாய் 19.4% உம் வீழ்ச்சியடைந்துள்ளமையை காட்டுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects