26.05.2024 அன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ளமையினாலேயே டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளிலே குறித்த திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இதுவரை 24,323 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇