தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டின் எஞ்சியுள்ள சில மாதங்களுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன,
“டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். இந்த வருடத்திற்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடும் கட்டத்தை எட்டுவோம். அதேபோன்று, அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்க்கிறோம். அங்கிருந்து சுமார் 2 வருட காலப்பகுதிக்குள் நாட்டின் 17 மில்லியன் மக்களையும் பழைய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக புதிய டிஜிட்டல் முறைமைக்குக் கொண்டுவர எதிர்பார்க்கிறோம்.”


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









