மட்டக்களப்பில் சமூக பாதுகாப்பு செயற்றிட்டம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் செயலமர்வினை சமூகப் பாதுகாப்பு நிபுணர் கே.விமலநாதன்னின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஶ்ரீகாந்த், சமூக பாதுகாப்பு செயற்றிட்ட நிபுணர்களான உப்புல் விறாமனகே, அமில பிறியங்க ஆகியோர் கலந்து கொண்டு மன குறைகளை தீர்ப்பது தொடர்பான செயலமர்வினை நடாத்தியிருந்தனர்.

சமூக பாதுகாப்பு தரவு பதிவேற்றம், அஸ்வெசும செயற்றிட்டம் மற்றும் அதன் எண்ணக்கரு, சமூக பாதுகாப்பு என்றால் என்ன?, சமூக பாதுகாப்பு தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவற்றை தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகள், சமூகப் பதிவேடு (தரவும் கட்டமைப்பு), தரவுக் கட்டமைப்பு பாதுகாப்பு முறைமைகள் தொடர்பாக இதன் போது தெளிவுபடுத்தியிருந்தனர்.

குறித்த முழு நாள் செயலமர்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விடய உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் விடயத்துடன் தொடர்புபட்ட உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects