டவர் மண்டப அரங்க மன்றத்தால் நடத்தப்படும் நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த தமிழ் மொழிமூலமான முதலாவது பிரிவு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் 28.12.2024 அன்று நடைபெற்றது .
இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇