உலகளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்ள்ஸ் டார்வின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக மத்திய ரஷ்யா, வடக்கு சீனா, வட அமெரிக்கா மற்றும் அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாகப் பயன்பட்டு வரும் நிலையில் இந்த வெப்பநிலை அதிகரிப்பு, அதன் பாதுகாப்பு தன்மையைப் பாதிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நிலத்தடி நீரைச் சார்ந்துள்ள விவசாயம் மற்றும் பல உற்பத்திகள் பாதிக்கப்படும்.
அதிக வெப்பநிலை கொண்ட நீரில் கரைந்தநிலை ஒக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டுள்ள நதிகளில் உள்ள மீன்கள் உயிர்வாழ முடியாது.
இது போன்ற பல்வேறு ஆபத்துக்களை உள்ளடக்கிய நிலத்தடி நீர் வெப்பநிலை அதிகரிப்பு, புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்ற விளைவுகளை மனிதர்கள் தீவிரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…