ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (14.08.2024) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட 19 அரசியல் கட்சிகளும் மற்றுமொரு அரசியல் கட்சியும் அடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேபோல், 16 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியவர்களில் அடங்குவர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை (15.08.2024) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11 மணி வரை நடைபெறவுள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல் அலுவலகம் அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇