கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அலுவலகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 27.03.2025 அன்று விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தில், அமைச்சர் மீனவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்களைப் பற்றி கேட்டறிந்து கொண்டார்.
அமைச்சராக பதவி ஏற்றதினைத் தொடர்ந்து, மட்டக்களப்பிற்கு அவர் மேற்கொண்ட இந்தப் பயணம், கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முதன்முறையாக நிகழ்ந்ததாகும். இவ்விஜயம், மீனவர்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக உள்ள ஆவலையும், தாங்கள் எதிர்கொள்கிற அவசர பிரச்சனைகளுக்கு தீர்வு பெறும் வழிமுறைகளையும் கேட்டுக்கொள்ளும் எண்ணத்துடன், அவர்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
சட்டவிரோத மீன்பிடியை தடுக்க, கடல் வளத்தை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதன் போது, ஆற்றினை ஆழப்படுத்துதல், களப்பு இறங்குதுறை அமைத்தல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் மீன்பிடி வசதிகளை அதிகரித்தல் தொடர்பான பல கோரிக்கைகள், சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஆள் கடல் மீன் பிடி குறித்த கோரிக்கைகள் மீனவர்களினால் முன்வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பேரில், கடற்றொழில் நீரியல் வள உதவி பணிப்பாளர் றுக்சான் குரூஸ், கடற்தொழிலாளர்கள், மீனவர் சங்கத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இப் பயணம், மீனவர்களின் பிரச்சனைகளை சரியான முறையில் தீர்க்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










