பல்வேறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி சம்பா அரிசி, கொண்டைக்கடலை, சீனி, செத்தல் மிளகாய், டின் மீன், பச்சை பட்டாணி உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன
இதற்கமைய, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 226 ரூபாவாகவும், கொண்டைக்கடலையின் விலையை 439 ரூபாவாகவும் நிர்ணயம் செய்வதற்கு லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், வெள்ளை சீனி மற்றும் செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்பட்ட 425 கிராம் டின் மீன் ஒன்றின் விலை 500 ரூபாவாகவும், 425 கிராம் உள்ளூர் டின் மீன் ஒன்றின் விலை 450 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇