மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 19 நாள் இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி நாள் நிகழ்வு (03.02.2024) அன்று புனித திரேசா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் பஸ்மிலா ரவிராஜ், கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் கல்யாணி, மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது 150 மணித்தியால கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களினால் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
நாடளாவிய ரீதியில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில் மட்டக்களப்பு மாவட்ட மவட்டத்தில் பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் 56 அரச உத்தியோகத்தர்கள் இக்கற்கைநெறியினை பூர்த்தி செய்திருந்தனர்.
அத்தோடு பயிற்சி நெறியின் வளவாளர்களான எம்.கே.திலினி மதுசிகா, சுதேசி தில்ருக்சி ஆகியோர் கலந்து கொண்டதுடன், நிகழ்வின் இறுதியில் அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது .
அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக்கற்கை நெறி அரச உத்தியோத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇