மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்பட்ட மூட்டு வலி பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சிகிச்சை…..

எம்முடைய வீட்டில் உள்ள முதியவர்கள் பெரும்பாலும் மூட்டு தேய்மானம் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் மூட்டு வலியால் அவதிப்படுவதை காண்கிறோம். அவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் நாட்பட்ட மூட்டு பாதிப்பின் காரணமாக நாளாந்த வாழ்க்கையில் அத்தியாவசியமான பணிகளை மேற்கொள்ளவும் மற்றவர்களின் உதவியை நாட வேண்டியதிருக்கிறது.

இந்நிலையில் இத்தகைய நாட்பட்ட மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு அழற்சி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு குறைந்த வீரியம் கொண்ட கதிர்வீச்சு சிகிச்சை எனும் நவீன சத்திர சிகிச்சையற்ற சிகிச்சை முறை அறிமுகம் ஆகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய வீடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மூட்டு வலி ஏற்பட்டால்… முதலில் சுய மருத்துவம், பிறகு வைத்தியர்களை சந்தித்து அவர்களின் பரிந்துரையில் மருந்தியல் சிகிச்சை மற்றும் இயன்முறை சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் பெறுகிறார்கள். சிலருக்கு விவரிக்க இயலாத பல காரணங்களால் இத்தகைய மூட்டு வலி சிகிச்சைக்குப் பிறகும் தொடரும்.

அவர்களுடைய வயதின் காரணமாக மூட்டு மாற்று சத்திர சிகிச்சை சாத்தியமில்லாத நிலையில் இருக்கும். இந்நிலையில் இருப்பவர்களுக்கு தற்போது குறைந்த அளவு வீரியம் கொண்ட கதிர்வீச்சு சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

முழங்கால், முழங்கை, தோள்பட்டை, இடுப்பு.. ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வலிகளை அதிலும் குறிப்பாக நாட்பட்ட பாதிப்புகளை குறைப்பதற்கு இத்தகைய நவீன சத்திர சிகிச்சையற்ற சிகிச்சை முறை பலனளிக்கிறது.‌இத்தகைய சிகிச்சை எளிதானது. பக்க விளைவுகள் அற்றது. வலியற்றது.

இதில் குறைந்த அளவு வீரியம் கொண்ட கதிர்வீச்சுகள் பாவிக்கப்படுவதால்.. ஆரோக்கியமான திசுக்கள் பாதிக்கப்படுவதில்லை. எண்பது சதவீத நிவாரணம் கிடைக்கும். இத்தகைய குறைந்த அளவு வீரியம் கொண்ட கதிரியக்க சிகிச்சை மூலம் மூட்டுகளில் ஏற்பட்ட வீக்கம் குறைக்கப்பட்டு, வலிக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது.

வைத்தியர் அமீத்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects