அம்கோர் நிறுவனத்தினால் SureCall நிறுவனத்தின் நிதி உதவியுடன் ”மனித வியாபாரத்திற்கு எதிரான செயற்பாடுகளை வலுவூட்டல்” எனும் தொனிப்பொருளில் மொனராகலை மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படும் திட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மனித வியாபாரத்திற்கு எதிரான மாவட்ட மன்றத்தின் நான்காவது அமர்வு 30.01.2024 அன்று அம்கோர் நிறுவனத்தின் மொனராகலை மாவட்டத்திற்கான திட்ட உத்தியோகத்தர் SH. அப்ராஸ் ஹமீட் ஒழுங்கமைப்பில் , அம்கோர் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் H. G.சரத் பல்லேகமவின் வழிகாட்டலில் , மொனராகலை மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. D.W.தகனாயகவின் தலைமையில் மொனராகலை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மொனராகலை மாவட்ட பொலிஸ் நிலையத்தின் பெண்கள் சிறுவர் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் இடம்பெற்ற மனித வியாபாரம் என கருதக்கூடிய சம்பவங்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி மன்றத்தின் அங்கத்தவர்களினால் கலந்துரையாடப்பட்டதுடன் அது தொடர்பான சில முடிவுகளும் எடுக்கப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇