ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தில் நிலவும் விலையிலேயே, அடுத்த மாதமும் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு 3,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு 1,482 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு 694 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇