மட்டக்களப்பு மாவட்டதின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் முதலாம் காலாண்டிற்க்கான கலந்துரையாடல் (08.02.2024) அன்று பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தியின் தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம்.மாகிர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ரமேஷ் காயத்ரி, கணக்காளர் எஸ்.சுந்தரலிங்கம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேசன், நிருவாக உத்தியோகத்தர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உள்ளகக் கணக்காய்வு அறிக்கை, பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரைகளும் முன்னேற்றங்களும், நிதி ரீதியான முன்னேற்றங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇