இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக சமூகம் ஒன்றிணைந்து நடாத்திய ‘எழுச்சிப் பொங்கல் விழா – 2024’ (08.02.2024) அன்று பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் கலந்து கொண்டதுடன் பிரதி உபவேந்தர் கலாநிதி பிரபாகரன், கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் வினோவபா, விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் திருமதி புனிதா பிரேமானந்தராஜா, வர்த்தக முகாமைத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் ராஜேஸ்வரன், கலை கலாச்சாரபீட பீடாதிபதி கலாநிதி குணபாலசிங்கம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் , பல்கலைக்கழக பதிவாளர் பகிரதன், நிதியாளர் பாரிஸ் மற்றும் கல்விசார், நிருவாக, கல்விசாரா ஊழியர்கள் அத்துடன் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது 108 பானைகளில் பொங்கல் பொங்கப்பட்டதுடன், பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
மேலும் பல்கலைக்கழக மாணவர்களின் நடனம் , களி இசை, குழு நடனம், குழுப் பாடல், சிங்களப் பாடல், கண்டிய நடனம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇