மருதானை புகையிரத நிலையத்தில் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களின் மூடிகளை முழுவதுமாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விசேட நீண்ட இருக்கையொன்று (Platform Bench) இன்று (05.11.2025) பயணிகளின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
களனிப் பல்கலைக்கழகத்தின் ‘ஸீரோ பிளாஸ்டிக் சொசைட்டி’ சமூக ஈடுபாட்டுப் பிரிவால் “Bloom Morph” திட்டத்தின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் புகையிரத நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுத்தும் சூழல் பிரச்சினையைக் கையாளும் நோக்குடன், பிளாஸ்டிக் கழிவுகளைப் பயனுள்ள கண்டுபிடிப்புகளாக மாற்றுவதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மூடிகளை மறுபயன்பாடு செய்வதன் மூலம், நிலையான வடிவமைப்பு மற்றும் சமூக ஈடுபாடு எவ்வாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் என்பதை மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










