திருகோணமலை – மட்டக்களப்பு புகையிரத மார்க்கத்தில் பகல் வேளைகளில் மாத்திரம் புகையிரத சேவைகள் இடம்பெறும் எனத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத மார்க்கத்தில் மின்னேரியா – ரொட்டவௌ பகுதியில் கடந்த 18 ஆம் திகதி அதிகாலை எரிபொருள் கொண்டு சென்ற புகையிரத்தில் மோதி 2 யானைகள் உயிரிழந்தன.
இதன்போது , புகையிரத மார்க்கத்தில் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக மட்டக்களப்பு – கொழும்பு மார்க்கத்தில் சகல புகையிரத சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டிருந்தன.
இந்த விபத்தைத் தொடர்ந்து குறித்த மார்க்கம் பாதுகாப்பற்றது எனவும், அதனூடாக பயணிப்பது பொருத்தமற்றது எனவும் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந் நிலையில் , குறித்த மார்க்கத்தினூடாக பகல் வேளைகளில் மாத்திரமே புகையிரதம் பயணிக்கும் எனத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇