ஸ்டார்லிங்க் செய்மதி இணையச் சேவை இணைப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக, கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க்கின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
குறித்த இணைய சேவை வழங்கலுக்கு வழிசெய்யும் வகையில் அண்மையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்புகள் சட்டத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்தியாவை தளமாகக் கொண்டுள்ள ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் தகவல்படி, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஸ்டார்லிங்க் இணைப்பை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇