கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை மதுவரி வருமானத்தின் மூலம் 105 பில்லியன் ரூபாவை ஈட்ட முடிந்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபா அதிகரிப்பு என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி குறிப்பிட்டுள்ளார்.
“2024 ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை, மதுவரித் திணைக்களம் திட்டமிட்டபடி 105 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு இந்த நேரத்தில், நாங்கள் 88 பில்லியன் ரூபாவைக் ஈட்டியிருந்தோம். இதன்படி 17 பில்லியன் ரூபா வளர்ச்சியை எட்டியுள்ளோம்.
இந்த 6 மாதங்களுக்குள் 20 பில்லியன் வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம்.
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக, எமது பிரதான உற்பத்தியகங்களில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால், சுமார் 3 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது.
இல்லையெனில், திட்டமிட்டபடி 107 பில்லியன் இலக்கை நோக்கி அடைந்திருப்போம்.
அதன்படி, கடந்த ஆண்டை விட சுமார் 20% வளர்ச்சியை எட்டியுள்ளோம். இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்” என்றார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇