யுனிசெப் நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

யுனிசெப் நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஹன்னான் சுலைமான், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை 26.11.2024 அன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இக் கலந்துரையாடலின் போது சிறுவர் பாதுகாப்பு,போசாக்கு குறைபாடு மற்றும் கல்வி உள்ளிட்ட முன்னைய சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது .

யுனிசெஃப் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் திரு.சஞ்சய் விஜேசேகர, இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி திரு. கிறிஸ்டியன் ஸ்கூக் மற்றும் பிராந்திய செயற்பாடுகளின் பிரதானி திருமதி யுகோ குசாமிச்சி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கைக் குழுவில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திரு. மஹிந்த குணரத்ன மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐ.நா மற்றும் மனித உரிமைகளுக்கான பணிப்பாளர் திருமதி திலினி குணசேகர ஆகியோர் பங்குபற்றினர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects