நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று (17.12.2024) முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றுடன் தொடர்புடைய அறிக்கைகள் அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்திலும் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 6ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇