கடந்த ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களினால், 487.6 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, 11.4 சதவீத அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பலாக பதிவாகியிருந்தது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாவினால் கிடைக்கப்பெற்ற வருமானம், 122 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதற்கமைய, 341.8 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியாக பெற்றப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சுற்றுலா துறையின் ஊடாக 153.5 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇