லண்டன் மேல்வருவத்தூர் ஆதி பரா சக்தி வழிபாட்டு ஹரோ மன்றத்தின் ஏற்பாட்டில், கர்நாடக சங்கீத ஆசிரியை அமரர் சிவசக்தி சிவநேசன் அம்மையாரின் பிறந்த நாளை
முன்னிட்டு கௌரவிப்பு நிகழ்வு ஆதி பராசக்தி வழிபாட்டு ஹரோ மன்ற அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கே.துரைராஜா தலைமையில் மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா ஜுலேகா முரளிதரன் மற்றும் கௌரவ அதிதிகளாக ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் சரோஜினி மகேஸ்வரநாதன் , மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே. குணநாயகம் ஆகியோரும் கலந்து கொண்டதுடன் ஆலய குருக்கள் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி வழிபாட்டு ஹரோ மன்ற உறுப்பினர்கள் , பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் சான்றிதழ்கள், துவிச்சக்கர வண்டி மற்றும் மடி கணிணிகள் என்பன வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் சிறந்த கல்விமான்கள் சமூக பற்றாளர்கள், பல்துறை சார் கலைஞர்கள், ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்பட்டதோடு, வாழ்வாதார உதவிகள், நுளம்பு வலைகளும் இதன்போது அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇