மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஆரோக்கியத்தை இது அள்ளி தரும் புளி….

தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்தது சமையல். அந்த சமையலில் பிரிக்க முடியாத அங்கம் வகிப்பது புளி. இந்த புளியை தவிர்த்து பெரும்பாலும் எந்த உணவையும் சுவையாக செய்துவிட முடியாது. இப்படி சமையலில் எப்படி தவிர்க்க முடியாத பொருளாக மாறியுள்ள புளியானது, உடல் ஆரோக்கியத்திலும் பல நன்மைகள் நமக்கு வழங்குகிறது.

குறிப்பாக செரிமானத்தை தூண்டவும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் புளி முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புளியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகும்.

புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது.

புளியில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தவும் திரவத்தை சமநிலைப்படுத்தவும் பயன்படுகிறது.

புளியில் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிபினால்கள் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது.

புளியில் உணவில் சேர்த்து கொள்ளும் போது, பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும்.

புளி ஒரு டானிக் போலவும், கிளீனிங் ஏஜென்ட் போலவும் செயல்படுகிறது. இது குடல் மற்றும் பிற செரிமான உறுப்புகளின் செயலிழப்பைக் கட்டுப்படுத்துகிறது.

புளியானது சட்னிகள் முதல் கறிகள் வரை, உணவில் சுவையை சேர்க்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியத்தை வளப்படுத்துகிறது. இது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டியாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects