திருச்செந்துர் ஓம்காரநாதா முன்பள்ளி சிறார்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு முன்பள்ளியின் முகாமையாளர் எஸ்.வரதநிரோசன் தலைமையில் ஈழத்து திருச்செந்துர் முருகன் ஆலய வளாகத்தில் (13.02.2024) அன்று இடம்பெற்றது.
ஆன்மிக அதிதியாக ஈழத்து திருச்செந்துர் முருகன் ஆலய பிரதம குரு சபரீச சைத்தன்னியர் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனும் , தலைமை அதிதியாக ஓய்வு நிலை பிரதம கணக்காளர் ஏ.ரவிந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் மலர் செண்டுகள் அதிதிகளுக்கு வழங்கி வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன் போது சிறார்களினால் பேண்ட் வாத்தியம் இசைத்தல், பேச்சு போன்ற அரங்க நிகழ்ச்சிகள் மூலம் தமது ஆற்றல் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதிதிகளினால் சிறார்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் ஏற்பாட்டு குழுவினரினால் அதிதிகளை பொன்னாடை பேர்த்தி கெளரவிக்கப்பட்டிருந்தனர்.
சுவாமி ஓம்காரநாதா முன்பள்ளியில் சிறந்த நல்ஒழுக்க விழுமியங்களுடன் கற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகுமென அதிதிகளினால் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇