பாகிஸ்தானில் எரிபொருள் விலை உச்சத்தை தொட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அதன் பிரகாரம் , இலங்கை ரூபாவில் ஒரு லீற்றர் பெற்றோல் 308.71 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசல் 321.83 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலை அதிகரிப்பு இன்று 16.02.2024 முதல் அமுலுக்கு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக பெற்றோல், டீசல் விலை 16.02.2024 இன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இம் மாதம் முதலாம் திகதி பாகிஸ்தானில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விலை அதிகரிப்பானது இலங்கை எரிபொருட்களின் விலைகளிலும் தாக்கம் செலுத்தக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇