இந்தியாவினால் தயாரிக்கப்பட்டுள்ள இன்சாட்-3டி எஸ் என்ற செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த செயற்கை கோள் வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டதென இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்கை கோள் வானிலை மற்றும் அனர்த்த எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறும் வகையில் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 17.02.2024 அன்று மாலை 5.35 க்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇