மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பொன்று 27.10.2025 அன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஊடக சந்திப்பில் தொற்றா நோய்கள் தொடர்பாக அதாவது மார்பகப்புற்று நோய், தற்கால சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் டெங்கு நோயின் தாக்கம் மற்றும் டெங்கு நோய் தாக்கத்திலிருந்து விடுபட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற பலவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதன் போது, ஜனாதிபதி செயலத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான சுற்றுச் சூழல் விருது வழங்கும் விழாவில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை புரிந்ததை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் R.முரளீஸ்வரன் நினைவு கூர்ந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மற்றும் வைத்திய சாலை உத்தியோகர்த்தர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் சுகாதார மேம்பாட்டுப் பிரிவை மேம்படுத்தும் முகமாக Health Promotion RDHS Batticaloa (https://www.facebook.com/profile.php?id=61577512082663) எனும் முகப்புத்தக பக்கம் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த பக்கத்தில் மக்களுக்கு தேவையான சுகாதார வழி முறைகள் தொடர்பான விழிப்புணர்வு விடயங்கள் பதிவிறக்கம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டது.

இவ் ஊடகசந்திப்பில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் R.முரளீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவுக்கான பொறுப்பதிகாரி வைத்தியர் மயில்வாகனம் ருதேசன், பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வைத்தியர் சரவணன், மாவட்ட பிராந்திய பூச்சியலாளர் தர்ஷினி குணனீதன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் அச்சுதன், சுகாதார உத்தியோகத்தர்கள், ஊடகவியாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects